இயக்குநரும், நடிகருமான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சொர்க்கவாசல்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக காணொளியுடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சொர்க்கவாசல்' எனும் திரைப்படத்தில் ஆர். ஜே. பாலாஜி, கருணாஸ், செல்வராகவன், நட்டி என்கிற நட்ராஜ், பாலாஜி சக்திவேல், சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, மௌரிஷ் தாஸ், ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சிறைகைதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் , திங்க் ஸ்டுடியோஸ், எஸ் என் எஸ் மூவி புரொடக்ஷன் எல் எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் இந்தப் படம் எதிர்வரும் 29 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக காணொளியில் இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM