தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் 'பி பி 180' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

09 Nov, 2024 | 04:54 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையும், பரத நாட்டிய கலைஞருமான தான்யா ரவிச்சந்திரன் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பி பி 180' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஜே பி இயக்கத்தில் உருவாகி வரும் 'பி பி 180' எனும் திரைப்படத்தில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாகவும், நடிகை தானியா ரவிச்சந்திரன்  கதையின் நாயகியாகவும் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். 

ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். 

மருத்துவத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை அதுல் இந்தியா மூவிஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அதுல் எம். போஸ்மியா தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தான்யா ரவிச்சந்திரனும், டேனியல் பாலாஜியும் தோன்றியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் பின்னணி...

2024-12-07 17:19:24
news-image

'இசை அசுரன்' ஜீ .வி பிரகாஷ்...

2024-12-07 17:18:13
news-image

இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல்...

2024-12-07 17:17:57
news-image

சசிகுமார் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும்...

2024-12-07 17:18:28
news-image

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மெசன்ஜர்...

2024-12-07 17:19:04
news-image

'பிக் பொஸ்' பாலாஜி முருகதாஸ் நடிக்கும்...

2024-12-07 17:20:01
news-image

'புஷ்பா 2 - தி ரூல்'-...

2024-12-06 17:28:33
news-image

ஃபேமிலி படம் - திரைப்பட விமர்சனம்

2024-12-06 17:03:21
news-image

டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் வரவேற்பு பெற்ற...

2024-12-06 15:52:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'போத்தல்...

2024-12-04 17:22:59
news-image

மெகா ஸ்டார்' சிரஞ்சீவியை இயக்கும் இயக்குநர்...

2024-12-04 17:23:34
news-image

'இசை ஞானி' இளையராஜா இசையில் திரைப்படமாக...

2024-12-04 17:22:18