ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வவுனியா நகரப் பகுதியில் இன்று (9) பிரச்சாரத்தினை மேற்கொண்டார்.
வைரவ புளியங்குளம் பகுதியில் ஆரம்பமான இந்த பிரச்சார நடவடிக்கைகள், நகரின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் கூட்டணியின் வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், பெருமளவான தொண்டர்கள் பங்கெடுத்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்,
இந்த அரசாங்கம் தங்களது சுய ரூபத்தை படிப்படியாக வெளிப்படுத்தி வருகிறது. முதலில் ஜ.நா. தீர்மானத்தை ஏற்க முடியாது என்றார்கள், 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றார்கள், இன்று சமஸ்டிக்கு எதிராக பேசுகின்றனர்.
இடதுசாரித்துவ கட்சி என்று தங்களை கூறிக்கொண்டு சிங்கள தேசியவாத கொள்கையினை நடைமுறைப்படுத்தும் ஒரு நிலையே அவர்களிடம் உள்ளது.
எமது மக்கள் பல இழப்புக்களை தாண்டி வந்துள்ளனர். எனவே, இனத்தின் விடுதலைக்காக மக்கள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM