முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சாகோதரி சாந்தினி ராஜபக்ஷ காலமானார்.

இவர் இன்று அதிகாலை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து காலமாகியுள்ளார்.

இவர் நோய்நிலை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது 58வது வயதில் உயிரிழந்துள்ளார்.

இவரது பூதவுடல் தற்போது நுகேகொட - எம்புல்தெனியவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறுதிக்கிரியைகள் நாளை மாலை உடஹாமுல்ல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.