சீனாவால் வழங்கப்பட்ட நிதி திறைசேரிக்கு அனுப்பி வைப்பு 

Published By: Digital Desk 3

09 Nov, 2024 | 04:42 PM
image

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 வரை, இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சீனாவால்  வழங்கப்பட்ட சுமார் 30 மில்லியன் ரூபா நிதி உதவி திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த மக்களின் வீடுகளை புனரமைப்பதற்காக தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம் அந்த நிதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் போதுமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாததால், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருந்தது.

மேலும், அவசரகால மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் சீன மக்கள் குடியரசில் இருந்து கிடைக்கவுள்ள 10 மில்லியன் யுவான் பொருள் உதவி மற்றும் பொருட்கள் பெறப்பட்டவுடன் முறையான கணக்குப்பதிவுக்குப் பிறகு விநியோகிக்கப்பட உள்ளன.

மேலும், சேதமடைந்த வீடுகள் மற்றும் உடைமைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குதல், வீடுகளின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளையும் அனர்த்த நிவாரணம் மற்றும் கண்காணிப்புத் திட்டத்தின் ஊடாக விரைவாக நிறைவேற்றவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45