'அயோத்தி', 'கருடன்', 'நந்தன்' என தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வரும் நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஃப்ரீடம் ஓகஸ்ட் 14 'எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஆகாயம் அம்புட்டையும்' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஃப்ரீடம் ஓகஸ்ட் 14' எனும் திரைப்படத்தில் சசிகுமார், லிஜா மோள் ஜோஸ், மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட் ,ரமேஷ் கண்ணா, சுதேவ் நாயர், 'பொய்ஸ்' மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
தமிழகத்திற்கு அடைக்கலமாக வருகை தரும் ஈழ ஏதிலிகளின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய கணபதி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில்.. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆகாயம் அம்புட்டையும் அள்ளிக்குதே மனசுதான்...' என தொடங்கும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் சினேகன் எழுத, பின்னணி பாடகர் பிரதீப் குமார் பாடியிருக்கிறார்.
பாடல் வரிகள் மலையும் மலை சார்ந்த மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பது போல் இருப்பதாலும் ஜிப்ரானின் வசீகரிக்கும் மெட்டினாலும் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் உள்ள இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM