அறுகம்குடாவில் யூதர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளும் திட்டம்- அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அமெரிக்க நீதி திணைக்களம்

Published By: Rajeeban

09 Nov, 2024 | 02:43 PM
image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டங்களை தீட்டிய நபரிடம் ஒக்டோபர் மாதம் இலங்கை அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளும் திட்டத்தினை முன்னெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈரான் இராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையே இந்த திட்டத்தை ஒப்படைத்திருந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க நீதி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஒக்டோபர் 23ம் திகதி அமெரிக்க இஸ்ரேலிய அரசாங்கங்கள் அறுகம்குடாவில் சுற்றுலாப்பயணிகளிற்கு ஆபத்துள்ளதாக எச்சரித்திருந்தது.

அதன் பின்னர் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் மூன்றுநபர்களை கைதுசெய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர்  சிசி- 2

அமெரிக்க இஸ்ரேலிய அதிகாரிகள் பொதுவான பயண எச்சரிக்கையை வெளியிட்ட பின்னர் சிசி 2 இலங்கை அரசாங்கத்தினால் கைதுசெய்யப்பட்ட பின்னர் ஒக்டோபர் 28 ம் திகதி சகேரி தான் சிசி-2விடம் இலங்கைக்கான இஸ்ரேலிய துணை தூதரகத்தை கண்காணிக்குமாறு உத்தரவிட்டதாக எவ்பிஐயிடம் தெரிவித்திருந்தார்.

அவ்வேளை தானும் சிசி-2 என்பவரும் சிறைத்தண்டனையை அனுபவித்துவந்ததாக அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் துணைதூதரகத்தை கண்காணித்து வேவுபார்த்து பெறப்பட்ட தகவல்களை ஈரானின் புரட்சிகர காவல்படையிடம் ஒப்படைத்ததாக சகேரி எவ்பிஐயிடம் தெரிவித்தார்.

இதன் பின்னர் ஈரானிய அதிகாரிகள் மற்றுமொரு இலக்கை அடையாளம் காணுமாறு சகேரியை கேட்டுக்கொண்டுள்ளனர்,இதன் பின்னர் சகேரி சிசி-2 விடம்  இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அதிகமாக செல்லும் அறுகம்குடாவினை  வேவுபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர் அறுகம்குடாவில் பாரிய துப்பாக்கிபிரயோகத்தினை மேற்கொள்வதற்கு திட்டமிடுமாறு ஈரான் அதிகாரிகள் சகேரிக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சிசி-2 இந்த தாக்குதலிற்காக ஏகே47 துப்பாக்கிகளையும் ஏனைய ஆயுதங்களையும் வழங்குவார் என திட்டமிடப்பட்டதாக  சகேரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12