(எம்.எப்.எம்.பஸீர்)

கம்­பளை பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கங்கவட்ட வீதி பகு­தியில் தனது பெற்­றோ­ருடன் வசித்து வந்த இரண்­டரை வயது குழந்­தையை கடத்­தி­யமை, சட்டபூர்­வ­மான பாது­காப்பில் இருந்து குழந்­தையை பிரித்­தமை, தடுத்து வைத்­தமை மற்றும் கப்பம் கோரி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட மூவ­ரையும் எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. குழந்­தை­யுடன் மாய­மான, பின்னர் கடத்­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி என கண்­ட­றி­யப்­பட்ட  மாமா உறவு முறை இளைஞர் முஹம்மத் அசாம் மற்றும் குழந்­தையை தடுப்பில் வைத்­தி­ருந்த இரு பெண்­க­ளை­யுமே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க கம்­பளை மேல­திக நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார். இந்த கடத்­தலை குழந்­தையை இறு­தி­யாக அழைத்துச் சென்ற மாமா முறை இளை­ஞரே நடத்­தி­யுள்­ள­தாக  பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் பிரி­தொரு குழு­வொன்று இத­னுடன் தொடர்­புற்­றுள்­ளதைக் கண்­ட­றிந்­துள்­ள­துடன் அவர்­களைக் கைது செய்ய சிறப்பு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

 பொலிஸ் மா அதி­பரின் விஷேட உத்­த­ர­வுக்கு அமைய மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்க, கண்டி - மாத்­தளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்­க­நா­யக்க ஆகி­யோரின் கீழ் அமைக்கப் பட்­டுள்ள தனிப்­ப­டைகள் இரண்டின் கீழ் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­களை வழி நடத்தும் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் எம்.என்.எஸ். மெண்­டி­சிடம் வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஞான­சே­னவின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய இவ்­விரு குழுக்­களும் மேல­திக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளன. அதன்­படி ஒரு குழு கம்­பளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் எஸ். கிரி­சாந்­தவின் கீழும்,  மற்­றை­ரைய குழு கம்­பளை பிராந்­திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரியின் கீழும் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

குழந்­தையின் தந்­தைக்கு மதிய நேர உண­வினை எடுத்துச் செல்லும் வழியில் குறித்த கடத்தல் இடம்­பெற்­ற­தாக குழந்­தையின் தாயினால் பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டப்­பட்­டது. 

மே 3 ஆம் திகதி பிற்­பகல்  2.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில், குழந்­தையின் தந்­தைக்கு மதிய உண­வினை அவ­ரது வர்த்­தக நிலை­யத்­துக்கு அனுப்ப குழந்­தையின் தாய் தீர்­மா­னித்­துள்ளார். வீட்­டி­லி­ருந்து சுமார் 100 மீற்­றர்­க­ளுக்கு உட்­பட்ட   குறித்த வர்த்­தக நிலை­யத்­துக்கு மதிய உண­வினை கொண்டு சென்று கொடுத்­து­விட்டு வரு­மாறு இதன் போது 23 வய­தான  இளை­ஞ­ரிடம் குழந்­தையின் தாய் கூறி­யுள்ளார். பதுளை பிர­தே­சத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன் அவர்­களின் உற­வினர் என்ற வகையில் கண்டி வைத்­தி­ய­சா­லையில் மன நோய் ஒன்று தொடர்பில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அது தொடர்­பி­லேயே கம்­ப­ளையில் உள்ள குறித்த வீட்டில் தங்­கி­யி­ருந்­துள்ளார்.

 இந் நிலையில் உண­வினை குறித்த இளைஞன் வர்த்­தக நிலை­யத்­துக்கு எடுத்துச் செல்ல தயா­ரான போது 2 வரு­டங்­களும் 8 மாதங்­களும் நிரம்­பிய ஆண் குழந்தை அந்த இளை­ஞ­னுடன் வர்த்­தக நிலையம் செல்ல அடம்­பி­டித்­துள்­ளது. இத­னை­ய­டுத்து குழந்­தையை தாய் அந்த இளை­ஞ­னுடன் அனுப்பி வைத்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து மிக அருகில் உள்ள குழந்­தையின் தந்­தையின் வர்த்­தக நிலை­யத்­துக்கு செல்­லாமல் குறித்த இளைஞன் குழந்­தையைக் கடத்திக் கொண்டு வேறு பிர­தே­சத்­துக்கு சென்­றுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

உணவு வரா­ததால் மீள வீட்டை தொடர்­பு­கொண்டு கணவர் மனை­வி­யிடம் விசா­ரித்த போதே குழந்­தையும் உண­வெ­டுத்து வந்த இளை­ஞனும் கடைக்கு போக­வில்லை என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

சம்­பவம்  நடைப்­பெற்ற பின்னர் பகல்  3.  30 மணி­ய­ளவில் கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் இளை­ஞனின் தொலை பேசி­யூ­டாக குறித்த குழந்­தையின் தந்­தையின் தொலை பேசிக்கு அழைப்­பொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில்   குறித்த இளை­ஞரும் குழந்­தையூம் நல­மாக இருப்­ப­தா­கவும் தாங்கள் மாலை 6 மணி­ய­ளவில் மீண்டும் தொடர்பு கொள்­வ­தா­கவும் கூறி தொலை பேசியை துண்­டித்து விட்­ட­தாக உற­வி­னர்கள் தெரி­வித்­தனர்.  

எனினும்   மீண்டும் தொடர்பு கொள்­ளா­மை­யை­ய­டுத்து  இது குறித்து கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில்  முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது . இத­னை­ய­டுத்தே பொலிஸ் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

மறு நாள் காலை வேளையில் குழந்­தையின் தந்­தைக்கு தொலை­பேசி அழைப்­பா­னது மீளவும் வந்­துள்ள நிலையில் குழந்­தையை விடு­விக்க 30 இலட்சம் ரூப  கப்பம் கோரப்­பட்­டுள்­ளது. இந்த தொகை­யா­னது படிப்­ப­டி­யாக குழந்­தையின் தந்­தையால் 10 இலட்சம் ரூபா வரை பேசி குறைக்­கப்­பட்­டுள்­ளது.

 பொலிஸார் கப்பம் கோர பயன்­ப­டுத்­தப்­பட்ட  குழந்­தை­யுடன் மாய­மான 26 வயது இளை­ஞனின் தொலை­பேசி அலை­களை மையப்­ப­டுத்தி விசா­ர­ணை­களை நடத்­தினர். இதன் போது கடந்த சனிக்­கி­ழமை  அதி­காலை வேளையில் கண்டி பகு­தியில் கைவி­டப்­பட்ட நிலையில் குறித்த இளைஞன் பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்டார். இதன் போது பொலிஸார் அந்த இளை­ஞரை கடத்தல் குற்றச் சாட்டில் கைது செய்­தனர். ஏனெனில் அது­வரை பொலிஸார் நடத்­திய சிறப்பு விசா­ர­ணை­களில் குழந்­தையை அழைத்துச் சென்ற குறித்த இளைஞன் பிரி­தொரு கப்பக் குழு­வொன்­றுடன் தொடர்­புற்று கடத்­தலை திட்­ட­மிட்­டமை தொடர்பில் தக­வல்­களை சேக­ரித்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து கைது செய்­யப்ப்ட்ட இளை­ஞ­ரிடம் பொலிஸார் தீவிர விசா­ர­ணை­களை நடத்­திய போது, குழந்தை மட்­டக்­க­ளப்பு கர­டி­ய­னாறு பகு­தியில் வாடி வீடொன்றில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டது.

 இத­னை­ய­டுத்து கம்­பளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் வழி நடத்­தலில் சிறப்பு பொலிஸ் குழு­வொன்று மட்­டக்­க­ளப்பு கர­டி­ய­னாறு ஊறு­காமம் கிரா­மத்­துக்கு சென்­றுள்­ளனர். குழந்­தையின் உயிர் முக்­கியம் என விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட அதி­கா­ரிகள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு அறி­வு­றுத்தல் வழங்­கி­யி­ருந்­தனர்.   முதலில் மாறு வேடத்தில் இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் ஊடாக பொலிஸார் கப்பம் கோரி­யோ­ருக்கு 10 இலட்சம் ரூபாவை வழங்­கினர். இத­னை­ய­டுத்தே வாடி வீடொன்றில் இருந்த குழந்­தையை பொலிஸார் மீட்­டனர். இதனை அடுத்து உடன்   செயற்­பட்ட பொலிஸார் அந்த வாடி வீட்டில் இருந்த தாய் ஒரு­வ­ரையும் அவ­ரது மகல்­ளையும் உடன் கைது செய்­த­துடன் மீட்­கப்­பட்ட குழந்­தையை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்து அதன் ஆரோக்­கி­யத்தை உறுதி செய்­தனர்.

அப்­ப­கு­தியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் பொலிஸார் வழங்கிய 10 இலட்சம் ரூபாவை பிரதேசத்தின் ஆட்டுத் தொழுவம் ஒன்றுக்குள் இருந்து பொலிஸார் கைப்பற்றினர். கப்பம் கோரல் விடயத்துடன் தொடர்புடைய பலர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

  கைது செய்யப்பட்ட இரு பெண்களும் குழந்தையின் மாமாவான கடத்தலின் முக்கிய சந்தேக நபரான இளைஞரையும் நேற்று பொலிஸார் கம்பளை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்  செய்தனர். இதன் போதே அவர்களை விளக்கமறியலில் வைக்கவும் ஏனையோரைக் கைது செய்யவும் நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.