மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றி களஞ்சியம் ஒன்றை நடாத்தி வந்ததாக கயுவத்தைக்கு பொறுப்பான அத்தியட்சகர் ஒருவர் 1820 மரத் துண்டுகளுடன் சந்தேகத்தின் மீது கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் புதன்கிழமை (06) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாகத் தெரிய வருவதாவது
மன்னார் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலுள்ள கயுவத்தை பகுதியில் அனுமதி பத்திரமின்றி கயுவத்தை பகுதியில் மரச்சாலை இயங்கி வருவதாக பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து பொலிசார் இவ் இடத்தை கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஏ.எஸ்.சந்திரபாலவின் பணிப்புரையின் கீழ் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியான பொ.பா.சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொ.சா36501 ரத்ணமனல இ 74927 குணசிங்க பொ.கொ37662 கருணாசிங்க , 37883 பிரேமரத்ன , 66638 ரத்னாயக்க , 83790 விமுர்த்தி 90464 திசாநாயக்க, 313999 சுபிதரன் என்போரால் இவ்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இக் களஞ்சியத்தில் பெருந் தொகையான முதிரை . பாலை மற்றும் பல்வேறு மரக்குற்றிகள் பலகைகள் சுமார் 1820 வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக கயுவத்தைக்கு பொறுப்பான அத்தியட்சகர் ஒருவரே நடாத்தி வந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு பொருட்கள் மற்றும் சந்தேக நபரும் மேலதிக நடவடிக்கைக்காக சிலாவத்துறை பொலிஸில் ஒப்படைக்கபட்டுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM