(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கு எதிராக பார்படொஸ், ப்றிஜ்டவுன் விளையாட்டங்கில் நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொழில்முறை வீரருக்கான நெறிமுறையை மீறியமைக்காக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
களத்தடுப்பில் வீரர்கள் நிறுத்தப்பட்ட நிலைகள் தொடர்பில் அணித் தலைவர் ஷாய் ஹோப்புடன் ஏற்பட்ட உடன்பாடின்மை காரணமாக போட்டியின் 4ஆவது ஓவர் முடிவில் அல்ஸாரி ஜோசப் களத்தை விட்டு வெளியேறினார்.
ஜோசப் அல்ஸாரி வெளியேறியதால் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் ஒரு ஓவர் முழுவதும் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது.
எவ்வாறாயினும் மீண்டும் களத்தடுப்பில் ஈடுபட்ட ஜோசப், மிக முக்கிய 2 விக்கெட்களை வீழ்த்த, அத் தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
இது இவ்வாறிருக்க, அல்ஸாரி ஜோசப்புக்கு விதிக்கப்பட்ட இரண்டு போட்டித் தடையை உறுதிசெய்யும் வகையில் மேற்கிந்தியத் திவுகள் கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (08) வெளியிட்டது.
'மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் பின்பற்றும் கிரிக்கெட் மதிப்புகளுடன் அல்ஸாரியின் நடத்தை ஒத்துப்போகவில்லை. அத்தகைய நடத்தையை புறக்கணிக்க முடியாது. சூழ்நிலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டும் பெறுமதிகள் உறுதிசெய்யப்படுவதை கருத்தில் கொண்டும் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளோம்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தனது செய்கை குறித்து அணித் தலைவர் ஷாய் ஹோப்பிடமும் ஏனைய வீரர்களிடமும் அல்ஸாரி ஜொசப் மன்னிப்பு கோரியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் நாளை சனிக்கிழமை (09) ஆரம்பமாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM