(நெவில் அன்தனி)
அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை சகலதுறைகளிலும் விஞ்சிய பாகிஸ்தான் 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
அவுஸ்திரேலிய மண்ணில் 7 வருடங்களின் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 1 - 1 என சமப்படுத்திக்கொண்டது.
மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நான்கு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.
இரண்டாவது போட்டியில் ஹரிஸ் ரவூப்பின் 5 விக்கெட் குவியல், ஷஹீன் ஷா அப்றிடியின் துல்லியமான பந்துவீச்சு, சய்ம் அயூப், அப்துல்லா ஷபிக் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 35 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களுக்கு சுருண்டது.
துடுப்பாட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் மாத்திரமே ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 35 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.
பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 26.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
சய்ம் அயூப் 5 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 82 ஓட்டங்களையும் அப்துல்லா ஷபிக் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்கள் இருவரும் 122 பந்துகளில் 137 ஓட்டங்களைப் பெற்று பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தன் பலனாக அவுஸ்திரேலியா சிரமப்படாமல் வெற்றியை ஈட்டிக்கொண்டது.
பாபர் அஸாம் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஆட்டநாயகன்: ஹரிஸ் ரவூப்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM