பிரதமரின் செயலாளர் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கிடையிலான சந்திப்பு

Published By: Vishnu

08 Nov, 2024 | 07:31 PM
image

பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்ட்ரு பட்றிக் (Andrew Patrick) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (7) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைத்தல் ,  ஊழல் எதிர்ப்பு மசோதாவை நடைமுறைப்படுத்தல் மற்றும்  தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல்  ஆகிய செயற்பாடுகளினூடாக பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு இலங்கை அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாராட்டு தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துமுகமாக விவசாயத் துறையை மேம்படுத்துதல் மற்றும் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவாதற்கு புதிய அரசாங்கம் தம்மை அர்ப்பணித்துள்ளதாக பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி இங்கு குறிப்பிட்டார்.

பொருளாதார ஒத்துழைப்பை விருத்தி செய்யுமுகமாக புதிய வழிகளை அறிமுகம் செய்தல் மற்றும் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதன்  மூலம்  இருநாடுகளுக்கிடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாம் செயலாளர் (அரசியல்) டொம் சோப்பர் (Tom Soper), FCDO சிரேஷ்ட ஆட்சி ஆலோசகர் பென் பவிஸ் (Ben Powis ) ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு...

2024-12-11 06:58:02
news-image

அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு...

2024-12-10 18:38:50
news-image

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர...

2024-12-10 18:42:50
news-image

ரணில் அரசாங்கத்தின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7...

2024-12-10 18:41:56
news-image

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், விசேட...

2024-12-10 18:33:17
news-image

அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-12-10 17:11:35
news-image

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தொடர்பில் நீதிமன்றுக்கு...

2024-12-10 18:31:30
news-image

'அரகலய' போராட்டத்தின் பின்னரான மக்களின் புரிதல்...

2024-12-10 17:26:59
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வுகாண வேண்டிய...

2024-12-10 18:36:51
news-image

வர்த்தமானிக்கு அமையவே அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனை...

2024-12-10 17:13:00
news-image

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க...

2024-12-10 18:28:09
news-image

விவசாயம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளைப் பாதுகாக்க...

2024-12-10 15:37:41