பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த தம்பதிக்கு விளக்கமறியல்!

08 Nov, 2024 | 06:42 PM
image

பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.

52 வயதுடைய கணவரும் 42 வயதுடைய மனைவியுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 10 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்த கணவர் மலேசியாவில் இருந்து இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார். 

இதன்போது, சந்தேக நபரான கணவரும் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு...

2024-12-11 06:58:02
news-image

அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு...

2024-12-10 18:38:50
news-image

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர...

2024-12-10 18:42:50
news-image

ரணில் அரசாங்கத்தின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7...

2024-12-10 18:41:56
news-image

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், விசேட...

2024-12-10 18:33:17
news-image

அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-12-10 17:11:35
news-image

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தொடர்பில் நீதிமன்றுக்கு...

2024-12-10 18:31:30
news-image

'அரகலய' போராட்டத்தின் பின்னரான மக்களின் புரிதல்...

2024-12-10 17:26:59
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வுகாண வேண்டிய...

2024-12-10 18:36:51
news-image

வர்த்தமானிக்கு அமையவே அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனை...

2024-12-10 17:13:00
news-image

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க...

2024-12-10 18:28:09
news-image

விவசாயம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளைப் பாதுகாக்க...

2024-12-10 15:37:41