தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த தருணத்தில் இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறன் பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றிருக்கும் 'அமரன்' படத்தை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ( D 55) தனுஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான அன்புச் செழியன் தயாரிக்கிறார்.
இதற்கான அதிக பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான தொடக்க விழாவும் சென்னையில் நடைபெற்றது.
மேலும் இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'அமரன்' இயக்குநரும் , 'அசுரன்' நாயகனும் கரம் கோத்திருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM