'நாயகன்' எனும் சரித்திர ரீதியிலான வெற்றி திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'தக் லைஃப் ' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி... கமலஹாசனின் பிறந்தநாளன்று பிரத்யேக காணொளி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக் லைஃப் ' எனும் திரைப்படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல்- மெட்ராஸ் டாக்கீஸ் -ரெட் ஜெயன்ட் மூவிஸ்- ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் அனைத்தும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில்.. 'உலக நாயகன்' கமல்ஹாசனின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டது.
அதில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கிளர்வோட்டத்தில் கமல்ஹாசனின் வித்தியாசமான எக்சன் காட்சிகளும்.. மணிரத்னத்தின் பிரத்யேகமான காட்சிப் கோணங்களும் இணைந்திருப்பதால்... ரசிகர்களிடத்தில் பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இந்த கிளர்வோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் 23 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM