நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் 'கங்குவா ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மன்னிப்பு' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கங்குவா' எனும் திரைப்படத்தில் சூர்யா, பொபி தியோல், திசா படானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.
வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.ஈ .ஞானவேல் ராஜா மற்றும் வம்சி- பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் 'மன்னிப்பு' எனும் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது படக்குழுவினர் பங்கு பற்றினர்.
'தன்னைத் தோண்டும் மனிதனுக்கு தாகம் தீர்க்கும் மண்ணைப் பார்..' எனத் தொடங்கும் இந்தப் பாடலும் பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுத பின்னணி பாடகர் ராகுல் தீக்ஷித் பாடியிருக்கிறார்.
ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் வசீகரிக்கும் மெட்டில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் இப்படத்தின் ஆன்மாவை இசையாக... இசையால் பேசுவதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
அதனால் இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், '' கங்குவா திரைப்படம் ஒரு பரிசோதனை முயற்சி. இந்த திரைப்படத்தின் உருவாக்கத்திற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பினை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
நெருப்பையும், குருதியையும் வழிபடும் மக்களின் வாழ்வியல் எப்படி இருக்கும்? என்பதை தான் இந்த படம் பேசுகிறது. 'கங்குவா' திரைப்படத்தில் எக்சன் காட்சிகள் மட்டும் அல்லாமல் தவறு செய்பவர்களையும்... குற்றம் செய்பவர்களையும்... மன்னிக்க வேண்டும் என்ற உணர்வையும், மன்னிப்பின் உயர்வையும் அழுத்தமாக விவரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு உங்களின் ஆதரவும், அன்பும் தேவை'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM