மிரட்டும் தோற்றத்தில் அனுஷ்கா

08 Nov, 2024 | 05:02 PM
image

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான அனுஷ்கா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'Ghatti' என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.  

சிலம்பரசன் -அனுஷ்கா நடிப்பில் தமிழில் வெளியான 'வானம்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'Ghatti' எனும் திரைப்படத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக முதன்மையான  வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவருடன் ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு , விக்ரம் பிரபு,  ரவீந்திர விஜய்,  ஜான் விஜய் , வி டி வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நாகவல்லி வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். 

எக்சன் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஃபர்ஸ்ட் ஃபிரேம் என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை யு வி கிரியேசன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

நடிகை அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்ற பார்வையை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

ரத்தம் தோய்ந்த முகத்துடன் அவரின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது. மேலும் படத்தின் தலைப்புடன் விக்டிம் - கிரிமினல் - லெஜண்ட் - என்ற வாசகமும் இடம் பிடித்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின்...

2024-12-10 18:41:08
news-image

பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் சீயான் விக்ரமின்...

2024-12-10 15:06:20
news-image

ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன்

2024-12-10 14:14:17
news-image

வசூலில் அதிரடி காட்டும் அல்லு அர்ஜுனின்...

2024-12-10 14:09:49
news-image

இறுதி கட்டத்தில் கௌதமன் நடிக்கும் '...

2024-12-10 14:10:21
news-image

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட நடிகை ராஷ்மிகா...

2024-12-10 14:10:48
news-image

இயக்குநர் பேரரசு தொடங்கி வைத்த 'சதுரங்க...

2024-12-10 12:14:23
news-image

பக்தி பாடல்களுக்கு முதல் முறையாக இசையமைத்த...

2024-12-10 11:58:52
news-image

ஷேன் நிஹாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்' படத்தின்...

2024-12-09 13:40:24
news-image

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் பின்னணி...

2024-12-07 17:19:24
news-image

'இசை அசுரன்' ஜீ .வி பிரகாஷ்...

2024-12-07 17:18:13
news-image

இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல்...

2024-12-07 17:17:57