ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலையின் பெண் அதிபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (08) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
ராகம பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் பெண் அதிபர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபர் ராகம, மத்துமகல பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் பிள்ளையைப் பாடசாலையின் முதலாம் தரத்தில் இணைத்து கொள்வதற்கு குறித்த பெண்ணிடம் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.
இதனையடுத்து இந்த பெண் இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பின்னர், சந்தேக நபர் தனது பாடசாலையின் அதிபர் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து மேலதிகமாக 02 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM