2017 ஆம் ஆண்டு இது­வ­ரை­யான காலப்­ப­கு­திக்குள் நாடு முழு­வதும் 90 டெங்கு மர­ணங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக சுகா­தார அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. 

சில மாவட்­டங்­களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம் காணப்­ப­டு­வ­தா­கவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்­திய நிபுணர் டாக்டர் பிர­ஷிலா சம­ர­வீர குறிப்­பிட்டார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

வரு­டத்தின் முதல் நான்கு மாதங்­களில் நாடு பூரா­கவும் சுமார் 40 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை, யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, குரு­நாகல், புத்­தளம்,காலி,மாத்­தறை, கண்டி ஆகிய மாவட்­டங்­க­ளி­லேயே அதி­க­மான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.