எம்மில் சிலருக்கு சுகவீனம் என்பது அடிக்கடி நிகழும். அவர்களும், வைத்தியர்களும் உறவினர்களைப் போல நண்பர்களை போல அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். வேறு சிலர் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைபாடு வந்தால் எம்முடைய உடலே அதற்கான எதிர்ப்பினை கண்டறிந்து, தன்னைத் தானே சீராக்கி கொள்ளும் என்ற கருத்தியலை உறுதியாக நம்பி சிகிச்சைக்காக வைத்தியரை சந்திக்கவே மாட்டார்கள்.
வேறு சிலர் வைத்தியர்களை சந்தித்தாலும் அவர் பரிந்துரைத்த மருந்தியல் சிகிச்சைகளை சில தினங்களுக்கு மட்டும் எடுத்துக் கொண்டு, ஓரளவு நிவாரணம் கிடைத்தவுடன் வைத்தியர்களின் பரிந்துரையை புறக்கணித்து தங்களின் நாளாந்த கடமையில் மூழ்கி விடுவார்கள்.
ஆனால் இவர்களுக்கெல்லாம் நாட்பட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டால் அப்போதுதான் கவலை அடைவார்கள். இந்தத் தருணத்தில் நாட்பட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் குறிப்பிட்ட இறை வழிபாட்டு பரிகாரத்தை மேற்கொண்டால் அதிலிருந்து நிவாரணம் பெறலாம் என எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதைப் பற்றி விவரிப்பதற்கு முன் முதலில் உங்களுடைய உடலில் ஏதேனும் ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டால் அதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அதனை புறக்கணிக்காமல் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
அது மட்டுமல்லாமல் அவர் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையையும் உறுதியாக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் வைத்தியர்கள் மேற்கொள்ளும் சிகிச்சையை உங்கள் உடல் ஏற்றுக்கொண்டு, சுகவீனத்திலிருந்து மீள்வீர்கள்.
அதே தருணத்தில் புற்றுநோய் உள்ளிட்ட நாட்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இவர்கள் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களிடம் சிகிச்சை பெறுவதுடன் பின்வரும் இறை வழிபாட்டு பரிகாரத்தையும் தொடர்ச்சியாக மேற்கொண்டால் அவர்கள் மேற்கொண்டு வரும் சிகிச்சை பலன் அளித்து, குணம் அடைவார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: கோதுமை அல்லது கோதுமை மாவு மற்றும் பூஜை பொருட்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய ஹோரை என குறிப்பிடப்படும் காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று, அந்த ஆலய வளாகத்தில் தனி சன்னதியுடன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் சூரிய பகவானுக்கு கோதுமை அல்லது கோதுமை மாவை படைத்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஆரோக்கியம் என்றால் அதற்கு சூரிய பகவானின் பரிபூரண அருள் வேண்டும். உங்களது ஜாதகத்தில் சூரியனின் வலிமையை பொறுத்து தான் உங்களின் உடல் ஆரோக்கியம் இருக்கும்.
சூரியன் பலவீனமானவராக இருந்தால்.. அருகில் இருக்கும் சிவாலயத்தில் தனி சன்னதியில் இருக்கும் சூரிய பகவானை ஞாயிற்றுக்கிழமை தோறும் கோதுமை மாவை படைத்து வணங்கி வருவதை வழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களது ஆரோக்கியம் சீராக பேணி பாதுகாக்கப்படும் என்பதும் உறுதி.
நாட்பட்ட நோய் பாதிப்புள்ளவர்கள் மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களும் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை வழிபட தொடங்கினால் அவர்களது ஆரோக்கியத்தில் மேம்பாடு ஏற்படுவதை அனுபவத்தில் உணரலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM