இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வரும் இணைய தலைமுறையினர் வார இறுதி நாட்களில் அலுவலக வேலையின் நெருக்கடியை தாங்க இயலாமல் மனதிற்கு ஓய்வளிப்பதற்காக விருந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, அதில் பங்கு பற்றி வருகிறார்கள்.
இந்த தருணத்தில் மது, புகை, போதை பொருட்கள் ஆகியவற்றை பாவிக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு முதுமை அடையும் முன்னரே அனியூரிசம் எனும் இரத்தநாள பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தற்போது நவீன முறையிலான சிகிச்சைகள் அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய உடல் இயக்கம் என்பது ரத்த நாளங்களில் முழுவதுமாக நடைபெறும் குருதி ஓட்டத்தை சார்ந்துள்ளது. இந்த குருதி ஓட்டத்திற்காக அமையப்பெற்றுள்ள ரத்த நாளங்கள் பல்வேறு காரணங்களால் தளர்வடைந்து விடும். இதன் காரணமாக ரத்த நாளங்களின் வெளிப்புறத்தில் வீக்கம் ஏற்பட்டு, அவை கட்டியாக மாறக்கூடும். சில தருணங்களில் இந்த வீக்கத்தில் ஏற்படும் விவரிக்க இயலாத அழுத்தத்தின் காரணமாக இவை வெடித்து, ரத்தக் கசிவை உண்டாக்கும்.
ரத்த நாளங்களில் ரத்த கசிவு ஏற்பட்டால் அதனை அனியூரிசம் என மருத்துவ மொழியில் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பு உடல் முழுதும் ஆரோக்கியமான முறையில் குருதி பயணிக்கும் ரத்த நாளங்களில் ஏற்படுகிறது.
அதாவது அசுத்தமான இரத்த நாளங்களில் அல்லாமல் சுத்தமான ரத்த நாளங்களில் இத்தகைய தளர்ச்சியும், வீக்கமும் பாதிப்பும் உண்டாகிறது.
மது அருந்துவதாலும் புகை பிடிப்பதாலும் போதை பொருட்களை பாவிப்பதாலும் ரத்தநாளங்கள் இயல்பான அளவை விட விரைவாகவே தளர்ச்சி அடைந்து, வீக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்களை பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க பிரத்யேக மருத்துவ பரிசோதனையை வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள்.
அந்த பரிசோதனையின் முடிவின் அடிப்படையில் பாதிப்பு உடலின் எந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கிறது என்பதனை பொருத்தும், பாதிப்பின் வீரியத்தை பொருத்தும், வைத்தியர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குகிறார்கள். சிலருக்கு இத்தகைய தருணத்தில் சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்க வேண்டியதிருக்கும்.
அவர்களுக்கு கூடுதலாக சில பரிசோதனைகளை மேற்கொண்டு நுண்ணிய சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிப்பார்கள்.இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறைக்கு நோயாளிகள் மாற வேண்டும். அதனைப் புறக்கணித்தால் மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு பாரிய பக்க விளைவை உண்டாக்கக் கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
வைத்தியர் விக்னேஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM