மீரா ஸ்ரீனிவாசன்
ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்துக்கு வந்ததையடுத்து தேசிய அரசியலில் தீர்க்கமான மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் கூட தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளையும் நீண்டகாலமாக புறக்கணிக்கப்படும் கோரிக்கைகளையும் வலியுறுத்துவதற்கு அவர்களுக்கு உறுதியான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியம் என்று தமிழ் அரசியல்வாதி எம்.ஏ. சுமந்திரன் கூறுகிறார்.
ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் நவம்பர் 14 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிடுகிறார்.
இலங்கை தமிழர்களை பல தசாப்தங்களாக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த தமிழரசு கட்சி 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவ கட்சியாக விளங்கியது. 2015 - 2019 பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தில் 16 ஆசனங்களை கொண்டிருந்த கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் (2020 -2024) பத்து ஆசனங்களையே கொண்டிருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விரட்டிய மக்கள் மோராட்ட இயக்கத்துக்கு வழிவகுத்த 2022 பொருளாதார நெருக்கடி இலங்கையின் அரசியல் மற்றும் தேர்தல் நிலக்காட்சியை பெருமளவுக்கு மாற்றிவிட்டது.
மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மூன்றாவது அரசியல் சக்தி ஒன்று அதிகாரத்துக்கு வந்திருக்கிறது.புதிய அரசாங்கம் ஆட்சிமுறைக் கட்டமைப்பில் பரந்தளவில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களைக் கொண்டுவருமானால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தனித்துவமான பிரிவினராக எமது உரிமைகளை வலியுறுத்துவதற்கு பாராளுமன்றத்தில் பலம்வாய்ந்த பிரதிநிதித்துவம் தமிழர்களுக்கு அவசியம் என்று தமிழரசு கட்சி வாக்காளர்களுக்கு கூறுகின்றது என்று சுமந்திரன் கூறினார்.
தமிழ் மக்கள் தங்களது அரசியல் உரிமைகளுக்காக கடந்த 75 வருடங்களாக போராடி வருகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர் தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழரசு கட்சி தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வு ஒன்றக்காகவே குரல் கொடுத்து வந்திருக்கிறது என்று கூறினார்.
உள் வேறுபாடுகள்
அதேவேளை, தமிழரசு கட்சி பல்வேறு சவால்களுடனும் மல்லுக்கட்டி வந்திருக்கிறது. அதன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்மைப்பு சிதறி அதன் அங்கத்துவ கட்சிகளான தமிழீழ மக்கள் விடுதலை கழகமும் (புளொட்) தமிழீழ விடுதலை இயக்கமும் (ரெரோ) வெளியேறி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன.
ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) புதிய கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறது
தமிழர்களின் அக்கறைகள்
மேற்கூறப்பட்ட நிகழ்வுகளை அடுத்து தமிழரசு கட்சி பலவீனமடைந்திருக்கிறதா என்று சுமந்திரனிடம் கேட்டபோது" இல்லை, உண்மையில் எமது நிலை பலமடைந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நாம் இப்போது மேலும் பலம்பொருந்திய தீர்க்கமான அரசியல் சக்தியாக மாறிவிட்டோம்.
எமது மக்களுடன் எவ்வாறு பணியாற்றுவது, எமது கோரிக்கைகளை எவ்வாறு வலியுறுத்துவது என்பதில் மிகவும் தெளிவாகவும் ஒத்திசைவுடனும் செயற்படக்கூடியதாக இருக்கிறது. அங்கத்துவ கட்சிகள் வெவ்வேறு திசையில் இழுக்க குழப்பகரமான தலைமைத்துவத்துடன் செயற்படவேண்டிய சிக்கல் இப்போது இல்லை" என்று பதிலளித்தார்.
உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்ட நிலையில் தமிழர்கள் தொடர்ந்தும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலையும் நீண்டகாலமாக நழுவிச்சென்று கொண்டிருக்கும் அரசியல் தீர்வையும் தொடர்ந்து கோரிக் கொண்டேயிருக்கிறார்கள்.
தமிழ்ப் பிராந்தியங்களில் அர்த்தபுஷ்டியான பொருளாதார மீட்சி இன்னமும் ஏற்படவில்லை. வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டக்களுக்கும் பாராளுமன்றத்தில் 28 ஆசனங்கள் உள்ளன. அவற்றுக்காக 2 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
தமிழ் வாக்காளர்கள் குறிப்பாக, இளைஞர்கள் இப்போது என்ன கோருகிறார்கள் என்பது குறித்து கருத்து தெரிவித்த சுமந்திரன் போரினால் பாதிக்கப்பட்ட மகுதிகளில் நல்ல தொழில் வாய்ப்புக்கள் மூலமாக பொருளாதார மூன்னேற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த பகுதிகளில் வேலைவாய்பின்மை உயர்வானதாக இருக்கிறது என்று கூறினார்.
" எமது உள்ளூர்ப் பொருளாதாரம் செழிக்க வேண்டும் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். வெளிநாடுகளுக்கு புலம்பெயராமல் சொந்த பகுதிகளிலேயே தொடர்ந்து வாழக்கூடியதாக பெருளாதாரம் வளரவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்" என்று அவர் கூறினார்.
அரசியல் தீர்வு
தொழில் வாய்ப்புக்களையும் பொருளாதார வலுவூட்டலையும் கோரிநிற்கின்ற அதேவேளை தமிழ் இளைஞர்கள் அரசியல் தீர்வு ஒன்றுக்கான நீண்டகாலக் கோரிக்கையை அவர்கள் கைவிடவில்லை. தனித்துவமான மக்களாக , ஒரு தேசமாக வாழ்வதற்கான அடிப்படைக் கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்துகிறா்கள் என்று சுமந்திரன் கூறினார். பொருளாதார அபிவிருத்திக்கான கோரிக்கையும் அரசியல் உரிமைகளுக்கான கோரிக்கையும் பின்னிப்பிணைந்தவை என்றார்.
செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சி ஜனாதிபதி திசாநாயக்கவின் பிரதம போட்டியாளரான முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தது.
அதிகாரப் பரவலாக்கத்துக்கான அதன் யோசனையை திசாநாயக்கவின் அரசாங்கம் இன்னமும் தெளிவாக முன்வைக்கவில்லை என்றபோதிலும், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை தொடர்ந்து முன்னெடுத்து நிறைவு செய்வதாக உறுதியளித்தது.
" அது வரவேற்கத்தக்க ஒரு முயற்சி. அந்த வரைவு அரசியல் தீர்வொன்றுக்கான நலம்வாய்ந்த கட்டமைப்பு ஒன்றை கொண்டிருந்தது " என்று சுமந்திரன் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM