கருஞ்சிவப்பாக மாறும் தெகிவளை கால்வாய்கள் -

08 Nov, 2024 | 03:24 PM
image

தெகிவளை மவுண்ட்லவேனியா பகுதிகளில் உள்ள கால்வாய்களில் இனந்தெரியாத சிவப்பு சாயம் கலந்துள்ளமை குறித்து தெகிவளையின் பொதுசுகாதார பரிசோதகர்  தெகிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

தெகிவளை மவுண்டலவேனியாவிலிருந்து அத்திடியவில் உள்ள பறவைகள் சரணாலயத்தை நோக்கி செல்லும் கால்வாய்களில்  சிவப்பு சாயம் கலந்துள்ளதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

கால்வாயில் கருஞ்சிவப்பு நிறத்தில் நீர் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கால்வாயக்குள் கைதொழில் கழிவுகளை வீசியிருக்கலாம் என சந்தேகம் வெளியாகியுள்ளது.

நவம்பர் ஐந்தாம் திகதி முதல் இந்த கலர்நீர் அத்திடிய பறவைகள் சரணாலயத்திற்குள் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து தெகிவளை மாநகரசபைக்கும்,கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கும் அறிவித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தெகிவளையில் உள்ள வீடொன்றிற்குள் இயங்கும் சிறிய தொழிற்சாலையிலிருந்தே இந்த  சாயம் வெளியேறியுள்ளதை கண்டுபிடித்துள்ளோம் என ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களி;ல் கடும் சீற்றம் வெளியிட்டு சூழலியாளர்களும் பொதுமக்களும்,ஆபத்தான தொழிற்சாலை கழிவுகளை வீசுவது தொடர்பில் ஒழுங்குபடுத்தல்  அமுலாக்கல் இன்மையே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

பல்லுயிர்பாதுகாப்பை முன்னிறுத்தி செயற்படும் அமைப்பொன்று இவ்வாறான நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய நீண்டகால பாதிப்பு குறித்து எச்சரித்துள்ளது.

இதன் விளைவுகளை நாங்கள் அனுபவிக்கதொடங்கியுள்ளோம்,ஈகிள் லோக்சைட் பகுதி தற்போது மாசடைந்துள்ளது- குக்குள் சாயம் எனப்படும் சாயமே இதற்கு காரணம் இவை ஆபத்தற்றவை போல தோன்றலாம் ஆனால்  கடல்உயிரினங்கள்  நகரவிலங்குகளிற்கு இவற்றால் ஆபத்து ஏற்படலாம் என  அந்த அமைப்பின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு...

2024-12-11 06:58:02
news-image

அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு...

2024-12-10 18:38:50
news-image

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர...

2024-12-10 18:42:50
news-image

ரணில் அரசாங்கத்தின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7...

2024-12-10 18:41:56
news-image

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், விசேட...

2024-12-10 18:33:17
news-image

அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-12-10 17:11:35
news-image

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தொடர்பில் நீதிமன்றுக்கு...

2024-12-10 18:31:30
news-image

'அரகலய' போராட்டத்தின் பின்னரான மக்களின் புரிதல்...

2024-12-10 17:26:59
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வுகாண வேண்டிய...

2024-12-10 18:36:51
news-image

வர்த்தமானிக்கு அமையவே அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனை...

2024-12-10 17:13:00
news-image

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க...

2024-12-10 18:28:09
news-image

விவசாயம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளைப் பாதுகாக்க...

2024-12-10 15:37:41