(அட்டன் கிளை)
அட்டன் பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் சுகாதார சீர்கேடுகளை முன்வைத்து அம்பகமுவ மாவட்ட சுகாதார வைத்தியர் அதிகாரி காரியாலய சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் தொடரப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஐந்து இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க அட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
மேற்படி வழக்க இன்று வெள்ளிக்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் மேற்படி உணவகத்தின் சமையலறையின் சுகாதார சீர்கேடுகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்ததுடன், 15 முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
சமையலறையிலுள்ள மலசல கூடத்தை மாற்றுதல், பழமையான கூரை பகுதியை சீர்செய்தல் உள்ளிட்ட விடயங்கள் இதில் உள்ளடங்கியிருந்தன.
சுகாதார பரிசோதகர்களின் விளக்கங்களை செவிமெடுத்த நீதவான் டிசம்பர் 13 ஆம் திகதிக்கு முன்பதாக மேற்படி உணவகத்தின் சமையலறை உட்கட்டமைப்புகள் சீர்செய்யப்பட வேண்டும் என்றும் அது குறித்த அறிக்கைகளை குறித்த திகதிக்கு முன்பதாக சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிட்டார்.
முன்னதாக உணவக உரிமையாளர் சுகாதார பரிசோதகர் குழுவினருக்கு தமது பணியை செய்ய விடாமல் தடுத்தமைக்கும் குழுவுக்கு தலைமை தாங்கிய பிரதான சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமைக்கும் கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM