அணித்தலைவர் சாய்ஹோப்புடன் முரண்பட்டுக்கொண்டு மைதானத்திலிருந்து வெளியேறிய மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பிற்கு இரண்டு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிஜ்டவுனில் இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது நான்காவது ஒவரில் அணித்தலைவரின் களதடுப்பு வியூகம் குறித்து திருப்தியடையாத அல்ஜாரி ஜோசப் ,தனது எதிர்ப்பை வெளியிட்டமை காணமுடிந்தது.
அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஜோர்டன் ஹோக்சினை ஆட்டமிழக்கச்செய்தார்.எனினும் அவர் அதனை கொண்டாடவில்லை.
அந்த ஓவர் முடிவடைந்ததும்,அணி;த்தலைவருக்கு அறிவிக்காமல் மைதானத்திலிருந்து வெளியேறி ஓய்வறைக்கு சென்றார்.
இதன் காரணமாக பத்து வீரர்களுடன் மேற்கிந்திய அணி ஐந்தாது ஓவர் பந்து வீசியது.
எனது அணியில் இவ்வாறான நடத்தைகள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை என மேற்கிந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் டரன்சமி தெரிவித்துள்ளார்.நாங்கள் நண்பர்களாக பழகுவோம் ஆனால் நான் கட்டியெழுப்ப விரும்பும் கலாச்சாரத்தில் இது ஏற்றுக்கொள்ளமுடியாது,என அவர் தெரிவித்துள்ளார்.
ஆறாவது ஓவரில் மீண்டும் ஜோசப் மைததானத்திற்குள் வந்தார் எனினும் 12 ஓவர் வரை அவர் பந்து வீசவில்லை,அதன் பின்னர் இரண்டு ஓவர்கள் பந்து வீசியவர் மீண்டும் மைதானத்திலிருந்து வெளியேறினார்.அதன் பின்னர் மீண்டும் திரும்பி வந்து ஐந்து ஓவர்கள் பந்து வீசினார் - பத்து ஓவர்கள் பந்துவீசி 45 ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
மேற்கிந்திய தீவுகள் அணி பின்பற்றும் விழுமியங்களுடன் அல்ஜாரி ஜோசப்பின் நடத்தை ஒத்துப்போகவில்லை என மேற்கிந்திய அணியின் கிரிக்கெட் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளை அலட்சியம் செய்ய முடியாது உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்திற்காக அல்ஜாரி ஜோசப் மன்னிப்பு கோரியுள்ளார்- கிரிக்கெட் மீதான எனது வேட்கை என்னை ஆக்கிரமித்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM