நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாபரே மாவத்தை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபரொருவரை மிரட்டி 7 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரொருவர் வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் பொரளை பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் ஆவார்.
நாரஹேன்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகள் மூவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாகவும் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM