மட்டக்களப்பில் சுகாதார அமைச்சினால் தட்டம்மை நோய்க்கெதிரான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்

Published By: Digital Desk 7

08 Nov, 2024 | 03:34 PM
image

நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் இனம் காணப்பட்டுள்ள தட்டம்மை நோயை இல்லாதொளிக்கும் சுகாதார அமைச்சின் விசேட வேலை திட்டத்தின் கீழ் நாளை சனிக்கிழமை (09) முதல் நாடளாவிய ரீதியில் தட்டம்மை நோய்க்கெதிரான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன. 

இத்திட்டத்தின் கீழ் நாளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் தட்டம்மை தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள் நடைபெறுவதை யொட்டி மட்டக்களப்பு தாதிய கல்லூரியில் தாதிய  மாணவர்களிடையே தட்டம்மை நோய் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (08) நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இதனை மேற்கொண்டிருந்தது. 

மட்டக்களப்பு தாதிய  கல்லூரியில் பொது  சுகாதார பரிசோதகர் டி. மிதுன்ராஜ் முன்னிலையில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றிக் கொள்ளாத தாதிய மாணவர்களின் குழந்தை சுகாதார வளர்ச்சி பதிவேடுகள் பரிசோதிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் ஒரு தடுப்பூசி ஏற்றியிருந்தால் நாளை  ஆரம்பமாகும் தடுப்பூசி ஏற்றல்  நடவடிக்கையின் போது  இரண்டாவது தடுப்பூசியை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றாமல் இருந்தால் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொள்ள வேண்டும் அல்லது குறித்த சுகாதார அட்டை தொலைந்து போயிருந்தாலும் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலீடு, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதை பிரதிநிதித்துவப்படுத்தும்...

2024-12-13 02:13:40
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-13 01:02:13
news-image

'கோட்டாபய - பகுதி 2'ஆக மாறிவிட்டாரா...

2024-12-12 17:28:10
news-image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள...

2024-12-12 21:13:18
news-image

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்ய...

2024-12-12 17:20:39
news-image

சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி...

2024-12-12 21:12:41
news-image

சபாநாயகரின் “கலாநிதி” பட்டம் தொடர்பான சர்ச்சை...

2024-12-12 17:06:16
news-image

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு...

2024-12-12 21:15:23
news-image

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை :...

2024-12-12 17:04:17
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-12 19:27:14
news-image

மக்களுக்கிடையிலான இராஜதந்திரத்தின் உதாரணமாக அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டம்...

2024-12-12 19:23:22
news-image

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு...

2024-12-12 18:11:27