நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பதற்காக பொலிஸார் பலமுறை தலையிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.
நெதர்லாந்து பிரதமர் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளார்.
இஸ்ரேலியர்களிற்கு எதிரான மோசமான வன்முறையை தொடர்ந்து நெதர்லாந்திலிருந்து இஸ்ரேலிய கால்பந்தாட்ட ரசிகர்களை வெளியேற்றுவதற்காக இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
பெருமளவு பொலிஸார் பிரசன்னமாகியிருந்த போதிலும் இஸ்ரேலியர்கள் தாக்கப்பட்டனர் என ஆம்ஸ்டெர்டாம் மேயரும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய லீக் போட்டிகளிற்காக இஸ்ரேலின் மக்காபி டெல் அவியின் இரசிகர்கள் நெதர்லாந்திற்கு சென்றிருந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் - போட்டிக்கு முன்னதாகவே மக்காபி டெல் அவியின் இரசிகர்களிற்கும் பாலஸ்தீனிய ரசிகர்களிற்கும் இடையில் மோதலும் குழப்பமும் காணப்பட்டது பலர் கைதுசெய்யப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய கழகத்தின் ஆதரவாளர்கள் பாலஸ்தீன கொடிகளை கிழித்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM