பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

08 Nov, 2024 | 01:20 PM
image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

ஹிக்கடுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் ஹிக்கடுவை , பன்னம்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரொருவர் நேற்றைய தினம் காலை கைது செய்யப்பட்டுள்ளார். 

பூஸா பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த திருட்டு சம்பவங்களுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பூஸா பிரதேசத்தில் வசிக்கும் 28 மற்றும் 43 வயதுடையவர்கள் ஆவார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டு நாணயத்தாள்கள், தங்க நகைகள் மற்றும் 08 கிராம் 840 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம்...

2024-12-11 09:55:45
news-image

வடக்கு ஆளுநருக்கும் பிரிட்டன் தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையே...

2024-12-11 09:54:54
news-image

வவுனியாவில் தேர்தல் செலவீனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில்...

2024-12-11 09:22:41
news-image

வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு...

2024-12-11 06:58:02
news-image

அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு...

2024-12-10 18:38:50
news-image

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர...

2024-12-10 18:42:50
news-image

ரணில் அரசாங்கத்தின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7...

2024-12-10 18:41:56
news-image

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், விசேட...

2024-12-10 18:33:17
news-image

அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-12-10 17:11:35
news-image

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தொடர்பில் நீதிமன்றுக்கு...

2024-12-10 18:31:30
news-image

'அரகலய' போராட்டத்தின் பின்னரான மக்களின் புரிதல்...

2024-12-10 17:26:59
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வுகாண வேண்டிய...

2024-12-10 18:36:51