ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் பாடசாலையின் பெண் அதிபர் ஒருவர் வியாழக்கிழமை (07) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ராகம, மத்துமகல பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் பெண் அதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்த முறைப்பாட்டாளரின் பிள்ளையை பாடசாலையின் முதலாம் தரத்தில் இணைவதற்கு முறைப்பாட்டாளரிடம் ஒரு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.
பின்னர், சந்தேக நபர் பாடசாலையின் அதிபர் அலுவலகத்தில் வைத்து முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சத்தை பெற்றுக் கொள்ள முயன்ற போது கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM