நாடளாவிய ரீதியில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தேர்தலில் பெண்களின் பங்கு பற்றலை அதிகரிக்கும் முகமாகவும் அரசியலில் பெண்களின் அங்கத்துவத்தை ஸ்திர படுத்துவதை நோக்காக கொண்டு தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு வீதி நாடகம் நேற்று வியாழக்கிழமை (07) மன்னார் பேருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மகாலட்சுமி குரு சாந்தனின் ஒழுங்கமைப்பில் மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் குறித்த வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.
குறித்த நாடக காட்சிப்படுத்தலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன், மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், அரச உத்தியோகத்தர்கள்,மாதர் அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டு நாடகத்தை முழுமையாக பார்வையிட்டனர்,
இதனை தொடர்ந்து குறித்த வீதி நாடகமானது நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டதுடன் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண் அரசியல் பிரவேசம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காட்சிப் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM