கிராந்துருகோட்டை செனவிகம பகுதியில் வியாழக்கிழமை (07) இரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இலக்கம் 22, செனவிகம, உல்ஹிட்டிய, கிராந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 9.00 மணியளவில் தனது காணிக்கு வந்தகாட்டு யானையை விரட்ட முற்பட்ட போது யானை குறித்த நபரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலத்தை நீதிவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில் கிராந்துருகோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதேஷ் சதுரங்க, தலைமையில் பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM