13, 14 ஆம் திகதிகள் பாடசாலைகளுக்கு விடுமுறை  !

Published By: Digital Desk 3

08 Nov, 2024 | 01:02 PM
image

எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால் முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக 13 ஆம் திகதி  அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமையும் 14 ஆம் திகதி வியாழக்கிழமையும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் 18 ஆம் திகதி பாடசாலைகள் மீள  ஆரம்பிக்கப்படும். இந்தத் தீர்மானம் குறித்து  தேர்தல்கள் ஆணைக்குழு, மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 12 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் பாடசாலைகள் ஒப்படைக்கப்படும்.

தேர்தல் பணிகளுக்காக பாடசாலை மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டபங்களை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும்  கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம்.திலகா ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கையின் அடிப்படையில், வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் மாவா போதைப் பொருளை விற்றவர்...

2024-12-09 17:12:46
news-image

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச...

2024-12-09 17:25:22
news-image

விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு

2024-12-09 17:17:43
news-image

பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்தும்...

2024-12-09 17:30:51
news-image

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும்...

2024-12-09 17:06:14
news-image

மசாஜ் நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கூரிய...

2024-12-09 16:36:38
news-image

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் காயம் ;...

2024-12-09 16:47:56
news-image

பலவீனமடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை...

2024-12-09 16:33:55
news-image

பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக பிரதி அமைச்சர்...

2024-12-09 16:29:59
news-image

நஷ்ட ஈடு கேட்டு மூதூரில் விவசாயிகள்...

2024-12-09 17:27:28
news-image

கண்டி - கொழும்பு வீதியில் விபத்து...

2024-12-09 16:05:50
news-image

டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில்...

2024-12-09 15:51:18