வவுனியாவில் நேற்று (07) பொலிஸ் அதிகாரி ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

வவுனியா தோணிக்கல், ஆலடி பகுதியிலுள்ள ரயில் கடவையில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி  ஒருவரே இவ்வாறு குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குளவித் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரி பி. என். நிமால் (40) என தெரியவந்துள்ளது.