உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் திரைக் காவியமாக மாறியிருக்கிறது பாகுபலி=2. இந்நிலையில் பாகுபலி படத்தை இயக்கிய இயக்குநர் ராஜமவுலியும், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்து விரைவில் ஒரு படத்தை தரவிருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. 

இதுகுறித்து அண்மையில் இயக்குநர் ராஜமவுலியிடம் கேட்ட போது,‘ ரஜினியை வைத்து படம் பண்ணுவது என்பது சாதாரணமான விடயம் கிடையாது. சினிமாவில் அவருக்கென மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்து உள்ளது. அவருக்கேற்ற கதை அமைவது மிகவும் கடினம். அந்தமாதிரி ஒரு கதை எனக்கு அமைந்தால் என்னைவிட இந்த உலகத்தில் பெரிய மகிழ்ச்சியான ஆள் இருக்கவே முடியாது. ரஜினிக்கேற்றவாறு கதை அமைந்தால் கண்டிப்பாக அவரை வைத்து படம் இயக்குவேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால் ரஜினியின் ரசிகர்கள் சந்தோஷத்திலிருக்கிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்