களுத்துறை, அகலவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்லன பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (06) இரவு இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
அகலவத்தை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பாதசாரியும் படுகாயமடைந்துள்ள நிலையில் பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி சிக்ச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.
இதனையடுத்து, மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM