லொறி - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞன் பலி

07 Nov, 2024 | 05:22 PM
image

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்புல்கம - பனாகொடை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (06) மாலை இடம்பெற்றுள்ளது. 

பனாகொடையிலிருந்து எம்புல்கம நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியின் இடது பக்கமாகத் திரும்ப முயன்ற போது மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளானது வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞனும் படுகாயமடைந்துள்ள நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஆவார். 

இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி...

2024-12-10 09:16:17
news-image

இன்றைய வானிலை 

2024-12-10 06:56:10
news-image

உதயங்க வீரதுங்க - கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா...

2024-12-10 06:19:13
news-image

உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான...

2024-12-10 02:33:23
news-image

பெருவணிகர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு இடமளிக்காதீர்கள்...

2024-12-10 02:14:11
news-image

அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து...

2024-12-10 02:11:03
news-image

நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு...

2024-12-10 02:07:37
news-image

மனித உரிமைகள் தினம்: வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்...

2024-12-10 01:55:54
news-image

பிடி ஆணை பிறப்பிக்கபட்ட நபரை கைது...

2024-12-10 01:48:28
news-image

யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர்...

2024-12-10 01:45:13
news-image

இன்று செல்வத்தை சந்திக்கிறார் கஜேந்திரகுமார்

2024-12-10 01:39:10
news-image

புதிய அரசாங்கமும் மனித உரிமைகள் விடயங்கள்...

2024-12-10 01:36:55