(நெவில் அன்தனி)
இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட 31ஆவது மைலோ அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பி பிரிவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்று அசத்தியது.
13, 15, 17, 19 ஆகிய நான்கு வயது பிரிவுகளில் நடத்தப்பட்ட மைலோ பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றின.
இந்த சுற்றுப் போட்டியில் வட மாகாணத்திலிருந்து பங்குபற்றிய ஒரே ஒரு அணியான வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி 17 வயதுக்குட்பட்ட பி பிரிவில் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது.
மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பி பிரிவுக்கான 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் மொணராகலை ஆனபல்லம வித்தியாலய அணியை 18 - 15 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டு யாழ்ப்பாணம் கல்லூரி வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM