(நெவில் அன்தனி)
இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ அணிக்கும் இடையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டு வகை கிரிக்கெட் தொடர்களுக்கான இலங்கை ஏ குழாம்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் இரண்டு உத்தியோகப்பற்றற்ற நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளும் 3 போட்டிகளைக்கொண்ட உத்தியோகப்பற்றற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரும் நடைபெறவுள்ளன. நடைபெறவுள்ளன.
உத்தியோகப்பற்றற்ற நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை ஏ அணிக்கு றோயல் கல்லூரியின் முன்னாள் வீரரும் முவர்ஸ் கழக வீரருமான பசிந்து சூரயபண்டார தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஏ அணிக்கும் பாகிஸ்தான் ஏ அணிக்கும் இடையிலான முதலாவது உத்தியோகப்பற்ற நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நவம்பர் 11முதல் 14வரையும், இரண்டாவது போட்டி நவம்பர் 18 முதல் 21வரையும் நடைபெறும்.
இதேவேளை, 3 போட்டிகளைக் கொண்ட உத்தியோகப்பற்றற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரும் நடைபெறவுள்ளது.
இந்த மூன்று போட்டிகளும் நவம்பர் 25, 27, 29ஆம் திகதிகளில் நடைபெறும்.
இந்தத் தொடருக்கான இலங்கை ஏ அணிக்கு மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி அணியின் முன்னாள் தலைவரும், 19 வயதுக்குட்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான நுவனிது பெர்னாண்டோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நான்கு நாள் போட்டிக்கான குழாம்
பசிந்து சூரியபண்டார (தலைவர்), நிப்பன் தனஞ்சய, ஓஷத பெர்னாண்டோ, புலிந்து பெரேரா, பவன் ரத்நாயக்க, சொனால் தினுஷ, அஹான் விக்ரமசிங்க, விஷாத் ரந்திக்க, வனுஜ சஹான், விஷ்வா பெர்னாண்டோ, இசித்த விஜேசுந்தர, சாமிக்க குணசேகர, நிசல தாரக்க, அஷேன் டெனியல், தினுர களுபஹன.
ஒருநாள் போட்டிக்கான குழாம்
நுவனிது பெர்னாண்டோ (தலைவர்), லஹிரு உதார, காமில் மிஷார, பசிந்து சூரியபண்டார, பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, அஹான் விக்ரமசிங்க, சொனால் தினுஷ, தினுர களுபஹன, துஷான் ஹேமன்த, கவிந்து நடீஷான், வனுஜ சஹான், ஏஷான் மலிங்க, டில்ஷான் மதுஷன்க, நிப்புன் ரன்சிக்க.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM