அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அன்டனி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பினால் உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக அவுஸ்திரேலியா உள்ளது.
இந்த விடயம் குறித்து வியாழக்கிழமை (07) அவுஸ்திரேலிய தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில்,
மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக், பைட்டன்ஸின் டிக்டொக் மற்றும் இலான் மஸ்கின் எக்ஸ் தளம் ஆகிய சமூக ஊடகங்கள் இந்த சட்டத்திற்குள் அடங்கும். அத்துடன், ஆல்பபெட்டின் யூடியூப் சமூக ஊடகமும் உள்ளடக்கப்படும் என தெரிவித்துள்ளா்.
"எங்கள் சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிக்கின்றன. அதனால் நான் அதை தடைசெய்ய அழைப்பு விடுத்துள்ளேன் என அன்டனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் சமர்பிக்கப்படும். சமர்பிக்கப்பட்ட சட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்தை பெற்று 12 மாதங்களுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
அணுகலைத் தடுக்க அவர்கள் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு சமூக ஊடக தளங்களில் இருக்கும், ”என்று அவர் கூறினார்.
"பொறுப்பு பெற்றோர்கள் அல்லது இளைஞர்கள் மீது இருக்காது," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை செய்யும் சட்டம் முன்மொழியப்பட்டு பாராளுமன்றத்தில் பரந்த இரு கட்சி ஆதரவைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM