அரசியல் தீர்வைநோக்கிய பயணத்துடன் அபிவிருத்தியே எனது இலக்கு என முன்னாள் மாகாண அமைச்சரும் மருத்துவர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக சாத்தியமான வழிமுறைகளை பின்பற்றி புதிய அரசாங்கத்துடன் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதுடன் சமாந்திரமாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க பாடுபடுவேன்.
அண்மையில் மன்னார் மாவட்டத்தில் கிராமமொன்றிற்கு தேர்தல் பரப்புரைக்காக சென்றிருந்தேன். அங்கு முன்னாள் போராளி ஒருவர் என்னிடம் சங்கடமான கேள்வி ஒன்றைக்கேட்டார்.
நீங்கள் வெற்றிபெற்றால் தேசியத்துடன் இணைந்து பயணிப்பீர்களா அல்லது மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பீர்களா என்று. நான் அவருக்கு பதில்கூறினேன்,
இரண்டுடனும் இணைந்து பயணிப்பேன் என்று, தேசியம் என்பது எமது அரசியல் உரிமை அதனை பெறுவதற்காக தொடர்ந்தும் பாடுபடுவேன்,
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்துவைப்பதற்கும், பிரதேசத்தின் அபிவிருத்தியைச் செய்வதற்கும் மத்திய அரசின் துறைசார்ந்த அமைச்சுக்களுடனும், சர்வதேச நிதிநிறுவனங்களுடனும், புலம்பெயர் அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றுவேன்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்துவைப்பதற்காக இதயசுத்தியுடன் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு எமது கட்சி என்றுமே தயாராக உள்ளது.
அமையவுள்ள புதிய அரசாங்கத்தின் அணுகுமுறையில் மாற்றமொன்று ஏற்பட்டால் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனையை தீர்த்துவைப்பது இலகுவான விடயமாகும்.
எனினும் அவர்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். தேர்தல் காலத்தில் மாறுபட்ட கருத்துக்களை அவர்கள் தெரிவித்துவருகின்றனர்.
ஆனாலும் அரசியல் தீர்வு கிடைக்கும்வரை பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை புறந்தள்ளிவிடமுடியாது. அவற்றினை தீர்ப்பதற்காக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவது தவிர்க்கமுடியாததாகும்.
கடந்த காலங்களில் மாகாண அமைச்சராக நான் இருந்தபோது மத்திய அரசின் துறைசார் அமைச்சர்களுடன் பேசி வடக்கு மாகாணத்தில் பாரிய சுகாதார அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவருவதற்கு முடிந்தது.
எமது மாகாணத்தின் தேவைகள் ஏனைய மாகாணங்களை விட வேறுபட்டதாகும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.
யுத்தத்தினால் காயமடைந்து சுயமாக நடமாடமுடியாதவர்களுக்கு விசேட வைத்திய அலகு முல்லைத்த்Pவு மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று வடக்கு மாகாணத்தில் பல விசேட வைத்திய சிகிச்சை அலகுகளை அமைக்கமுடிந்தது, மக்களின் விடிவுக்காய் தம்மை அர்ப்பணித்தவர்கள் கவனிக்கப்படாதுள்ளனர்.
அவர்களுக்கான விசேட திட்டங்களை செயற்படுத்தவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்காது வெறும் உசுப்பேத்தும் பேச்சுக்களை பேசிக்கொண்டிருப்பதால் பலனேதும் கிடைக்கப்போவதில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM