திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான ஆதித்யா ராம் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் - 'குளோபல் ஸ்டார்' ராம்சரண் - ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் - கூட்டணியில் தயாராகி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதியன்று வெளியாகும் 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தை தமிழில் வழங்குகிறார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஆதித்யா ராம் பேசுகையில், ' இதற்கு முன் எம்முடைய தயாரிப்பு நிறுவனமான ஆதித்யா ராம் மூவிஸ் நிறுவனம் சார்பில் தெலுங்கில் நான்கு திரைப்படங்களை தயாரித்திருக்கிறேன்.
பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ஏக் நிரஞ்சன்' எனும் தெலுங்கு படத்திற்குப் பிறகு திரைப்பட தயாரிப்பு தொழிலில் இருந்து விலகி, நிலம் தொடர்பான தொழிலில் ஈடுபட விரும்பினேன்.
சென்னையின் புறநகர் பகுதியில் அதாவது கிழக்கு கடற்கரை சாலையில் ஆதித்யா ராம் எனும் பெயரில் படப்பிடிப்பு வளாகத்தை உருவாக்கினேன். தற்போது இங்கு முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தத் தருணத்தில் எம்முடைய நண்பரும், தயாரிப்பாளருமான தில் ராஜு எம்மை சந்தித்தார். அவரது தயாரிப்பில் உருவாகி வரும் 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தினை வழங்குவதில் இணைந்து பணியாற்ற முடியுமா? எனக் கேட்டார். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டிருக்கிறேன் அத்துடன் நாங்கள் இருவரும் இணைந்து தமிழில் மட்டுமல்லாமல் பான் இந்திய அளவிலான திரைப்படங்களை தயாரிக்கவும் தீர்மானித்திருக்கிறோம்.
அதன் வரிசையில் முதன் முதலாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவான 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தை தமிழில் வழங்குகிறேன்.'' என்றார்.
இதனிடையே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வட இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னௌவில் ஒன்பதாம் திகதியன்று வெளியிடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா டல்லாஸ் நகரிலும், சென்னையிலும், ஆந்திர பிரதேஷ் மற்றும் தெலுங்கானாவிலும் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM