அறிமுக நடிகர் ஹரி சங்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பராரி' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பராரி' எனும் திரைப்படத்தில் ஹரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு ராஜேந்திரன், சாம்ராட் சுரேஷ், புகழ் மகேந்திரன், வி. பிரேம்நாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை காலா ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் சார்பில் ஹரி சங்கர் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான ராஜுமுருகன் வழங்குகிறார்.
இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
அத்துடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 22 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் தொடர்பான காட்சிகள் உணர்வுபூர்வமாக இடம் பிடித்திருப்பதால் ஒரு பிரிவு ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இந்த திரைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM