வரவு - செலவு திட்டம் தாமதமாகும் அளவுக்கு நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் உதவியும் தாமதமாகும் - சுசில் பிரேமஜயந்த!

06 Nov, 2024 | 05:12 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அடுத்த வருடத்துக்காக வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தாமதமாகும் அளவுக்கு அரசாங்கத்தின் வருமானத்தை தேடிக்கொள்வதற்கான யோசனைகளை முன்வைக்க முடியாமல் போவதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையும் பிற்படுத்தப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.  

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே அதிகாரத்துக்கு வந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் யோசனைகளை வரவு செலவு திட்டத்தின் ஊடாகவே முன்வைக்க வேண்டும்.  

ஆனால் அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை இந்த வருடம் சமர்ப்பிப்பதில்லை என தெரிவித்திருக்கிறது.  அதற்கு பதிலாக இடைக்கால கணக்கு வாக்கெடுப்பொன்றை நிறைவேற்றிக்கொள்ளவதாக தெரிவித்திருக்கிறது.   

இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு மூலம் அரசாங்கத்தின் அன்றாட செலவுகளுக்கு மாத்திரமே பணம் செலவிட முடியும். அபிவிருத்தி திட்டங்களுக்கோ நிவாரணங்களை வழங்கவோ முடியாது.  

அதேநேரம் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தமதமாகும்போதும் அதுதொடர்பில் ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது ஊடகங்களை அச்சுறுத்தும் நடவடிக்கையையே அரசாங்கம் கையாண்டு வருகிறது.    

மக்களுக்கு அளித்த வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றுவது என அரசாங்கம் மக்களுக்கு தெரிவிப்பதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அவ்வாறு இல்லாமல் ஊடகங்களை அச்சுறுத்துவதில் எதுவும் இடம்பெறப்போவதில்லை.  

மேலும் அரசாங்கத்துக்கு உலக வங்கி 200 டொலர் மில்லியன் வழங்கி இருப்பதாக அரசாங்கம் பெருமையாக தெரிவித்து வருகிறது.   ஆனால் அது நன்கொடையாக வழங்கப்படவில்லை.

கடனாகவே வழங்கப்பட்டிருக்கிறது. எமது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய பொருளாதார அபிவித்தி இலக்குகளை அடைந்துவருவதை அடிப்படையாகக்கொண்டு எமக்கு கடன் வழங்குகிறது.  

தற்போதும் உலக வங்கி கடன் வழங்கி இருப்பது எமது வேலைத்திட்டத்தின் அடிப்படையிலாகும். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட கடன் உதவி தற்போது பிற்படுத்தப்பட்டிருக்கிறது.  

ஏனெனில் வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பது பிற்படுத்தப்படும்போது கடன் தவணையும் பிற்படுத்தப்படுகிறது.  வரவு செலவு திட்ட முன்மொழிவுகளிலேயே எமது வருமான இலக்குகளும் அதனை  அடைந்துகொள்வதற்கான சோசனைகளும் முன்வைக்கப்படுகிறது.   

எமது வருமான வழிகளை பார்த்தே எமக்கு அடுத்த கட்ட கடன் தவணை கிடைக்கிறது. அதேபோன்று வரவு செலவு திட்டம் பிற்படுத்தப்படுவதன் மூலம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிவாரணங்கள் வரி குறைப்புகள் என அனைத்தும் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு...

2024-12-11 06:58:02
news-image

அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு...

2024-12-10 18:38:50
news-image

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர...

2024-12-10 18:42:50
news-image

ரணில் அரசாங்கத்தின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7...

2024-12-10 18:41:56
news-image

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், விசேட...

2024-12-10 18:33:17
news-image

அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-12-10 17:11:35
news-image

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தொடர்பில் நீதிமன்றுக்கு...

2024-12-10 18:31:30
news-image

'அரகலய' போராட்டத்தின் பின்னரான மக்களின் புரிதல்...

2024-12-10 17:26:59
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வுகாண வேண்டிய...

2024-12-10 18:36:51
news-image

வர்த்தமானிக்கு அமையவே அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனை...

2024-12-10 17:13:00
news-image

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க...

2024-12-10 18:28:09
news-image

விவசாயம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளைப் பாதுகாக்க...

2024-12-10 15:37:41