தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யாவும், 'அமரன்' படத்தின் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றிருக்கும் நடிகை சாய் பல்லவியும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'தண்டேல்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் 'தண்டேல்' எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்தீப் வேத், கிஷோர் ராஜு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஷாம் தத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் உற்சாகமாக அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஏழாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில் நாயகனும் நாயகியும் கடல் பின்னணியில் காதலர்களாக தோன்றுவதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM