இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், நடிகருமான ஹர்பஜன்சிங் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'சேவியர்' என பெயரிடப்பட்டு, அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றப் பார்வையை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் ஜான் பால்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சேவியர்' எனும் திரைப்படத்தில் ஹர்பஜன்சிங், ஓவியா, ஜி. பி. முத்து, வி டி வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மாணிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி எம் உதயகுமார் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஷான்டோவா ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இயக்குநர் ஜான் பால்ராஜ் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜான் பால்ராஜ் பேசுகையில்,'' வைத்திய சாலையின் பின்னணியில் நடைபெறும் நிகழ்வுகளை நகைச்சுவையுடனும், திகிலான சம்பவங்களுடனும் எதிர்பாராத திருப்பங்களுடனும் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
தற்போது இந்த திரைப்படத்தில் நடிகர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்ற பார்வையை வெளியிட்டிருக்கிறோம். இதில் கதையின் நாயகனான ஹர்பஜன்சிங் - டொக்டர் ஜேம்ஸ் மல்ஹோத்ரா எனும் கதாபாத்திரத்திலும், ஓவியா - வர்ணா எனும் கதாபாத்திரத்திலும், ஜி. பி. முத்து - முத்து மாமா எனும் கதாபாத்திரத்திலும், விடிவி கணேஷ் -கடப்பார கணேசன் எனும் கதாபாத்திரத்திலும் தோன்றுகிறார்கள். விரைவில் இப்படத்தில் டீசர் வெளியிடப்படும்'' என்றார்.
இதனிடையே 'பிரண்ட்ஷிப்' எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமான ஹர்பஜன்சிங் நடிப்பில் வெளியாகும் படம் இது என்பதாலும், 'சேவியர்' எனும் தலைப்பிற்கு 'மீட்பர்' என பொருள் இருப்பதாலும், நகைச்சுவை பின்னணியில் தயாராவதாலும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே குறைந்தபட்ச அளவிலான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM