(நெவில் அன்தனி)
நியூஸிலாந்து எதிராக நடைபெறவுள்ள இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடர்களுக்கான இலங்கை குழாம்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று அறிவித்தது.
நியூஸிலாந்துக்கு எதிராக இரண்டு சர்வதேச ரி20 போட்டிகளிலும் 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை விளையாடவுள்ளது.
இந்த இரண்டு வகையான தொடர்களுக்கான இரண்டு குழாம்களில் 12 வீரர்கள் இடம்பெறுகின்றனர்.
இரண்டு அணிகளுக்கும் வழமைபோல் சரித் அசலன்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சரித் அசலன்கவுடன் பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெவ்றி வெண்டர்சே, சமிந்து விக்ரமசிங்க, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்திலும் சர்வதேச ரி 20 குழாத்திலும் இடம்பெறுகின்றனர்.
நிஷான் மதுஷ்க, டில்ஷான் மதுஷன், மொஹமத் ஷிராஸ் ஆகியோர் ஒருநாள் குழாத்தில் மாத்திரம் இடம்பெறுவதுடன் தினேஷ் சந்திமால், பானுக்க ராஜபக்ஷ, நுவன் துஷார, மதீஷ பத்திரண, பினுர பெர்னாண்டோ ஆகியோர் ரி20 குழாத்தில் மாத்திரம் இடம்பெறுகின்றனர்.
2 போட்டிகள் சர்வதேச ரி20 தொடர் தம்புள்ளையில் நவம்பர் 9, 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி தம்புள்ளையில் 13ஆம் திகதியும் கண்டியில் 17 மற்றும் 19ஆம் திகதிகளிலும் நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM