(எம்.மனோசித்ரா)
எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இரு ஊடகவியலாளர் மாநாடுகளில் இருவேறுபட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் விலைசூத்திரத்துக்கமைய எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படவில்லை என்றும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மதிப்பீடுகளுக்கமையவே தீர்மானிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் புதன்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னர் குறிப்பிட்ட கருத்து முற்றிலும் மாறுபட்ட வகையில், விலைசூத்திரத்துக்கமையவே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மீண்டும் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, விலைசூத்திரத்துக்கமையவே விலை திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதிகாரத்தை இழந்துள்ளதால் புதிய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்கள் முன்னைய ஆட்சியாளர்களால் பரவலாக முன்வைக்கப்படுகிறது. நாம் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின்னர் எரிபொருட்களின் விலைகளை 20 ரூபாவால் குறைத்திருக்கின்றோம். ஆனால் அது தற்போது பெரும்பாலானோருக்கு நினைவில் இல்லை.
விலைசூத்திரத்துக்கமைய உலக சந்தையில் எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டே உள்நாட்டில் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகிறது. பொருளாதாரம் மேம்படும் போது மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்கள் வழங்கப்படும். கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கமையவே தற்போது எரிபொருள் விலைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை 2024.12.01 தொடக்கம் 2025.05.31 வரையான காலப்பகுதியில் 92 ரக பெற்றோலை கொள்வனவு செய்வதற்கான விலைமனு சிங்கப்பூரின் விடோல் ஏசியா தனியார் கம்பனிக்கு வழங்கப்படவுள்ளது. அதற்கமைய 5 கப்பல்கள்களில் 1.5 மில்லியன் பீப்பாய் 92 ரக பெற்றோலை குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM