வரிசைகள் இல்லாமலாக்கப்பட்டு கடவுசீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது - அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்

Published By: Digital Desk 3

07 Nov, 2024 | 09:25 AM
image

(எம்.மனோசித்ரா)

கடவுசீட்டுகளை ஒரே சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொள்வதற்கு பதிலாக தொகுதி தொகுதியாக பெற்றுக் கொள்ளும் வகையிலேயே கடந்த அரசாங்கம் இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. எனவே தான் மக்களின் தேவைக்கேற்ப அவற்றை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனினும் தற்போது வரிசைகள் இல்லாமலாக்கப்பட்டு கடவுசீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (06) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது அனுபவம் குறித்து பேசுபவர்கள் ஏற்படுத்திய பிரச்சினையின் விளைவாகவே கடவுசீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வரிசையில் நிற்கின்றர். எவ்வாறிருப்பினும், இதனை ஓரளவு முகாமைத்துவம் செய்து தற்போது கடவுசீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதற்கமைய தொகுதி தொகுதியாக கடவுசீட்டுக்கள் கிடைக்கப் பெறுகின்றன.

கடந்த அரசாங்கம் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 750,000 கடவுசீட்டுக்களை ஒரே சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொள்வதற்கான இணக்கப்பாட்டை கடந்த அரசாங்கம் எட்டவில்லை. இதன் காரணமாகவே தேவைக்கேற்ப கடவுசீட்டை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடவுசீட்டுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தற்போது அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது இணைவழியூடாக விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவசர தேவையின் அடிப்படையில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் உரிய நேரத்தில் கடவுசீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ...

2025-12-08 02:33:22
news-image

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதியை சந்தித்தார்

2025-12-08 01:10:56
news-image

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து நன்றி தெரிவித்த...

2025-12-07 22:47:34
news-image

தமிழகத்திலிருந்து கப்பலில் நாட்டை வந்தடைந்த நிவாரண...

2025-12-07 22:16:46
news-image

அலுவலக புகையிரதங்களைப் பயன்படுத்தியோருக்கான விசேட பஸ்...

2025-12-07 18:34:43
news-image

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான...

2025-12-07 21:04:30
news-image

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நீர் வழங்கல்...

2025-12-07 18:13:48
news-image

கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு - மக்களை...

2025-12-07 20:57:07
news-image

புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது...

2025-12-07 20:41:57
news-image

உணவுப் பொருட்களை வாங்கும்போது அவதானமாக இருக்குமாறு...

2025-12-07 18:36:26
news-image

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில்...

2025-12-07 19:48:12
news-image

சூறாவளி டிட்வா நிவாரணத்திற்காக அமெரிக்க விமானப்படையின்...

2025-12-07 19:35:08