'அவர்களிற்கு ரணில் தேவை - ரணிலுக்கு அவர்கள் தேவை "- கோட்டாபய நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு முன்னர் நிகழ்ந்த விடயங்கள் குறித்து எரான்பேட்டியில் கருத்து

Published By: Rajeeban

06 Nov, 2024 | 03:00 PM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022 இல்  நாட்டிலிருந்து தப்பியோடுவதற்கு முன்னர் அவருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து பேட்டியொன்றில் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண அவ்வேளை கோட்டாபயவுக்கும் அவரை சார்ந்தவர்களி;ற்கும் ரணில் விக்கிரமசிங்க தேவைப்பட்டார் ரணில்விக்கிரமசிங்கவிற்கு அவர்கள் தேவைப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி - நாடு நெருக்கடியான நிலையிலிருந்தவேளை ஏன் எரான் போன்றவர்கள் ரணில்விக்கிரமசிங்கவுடன் இணையவில்லை என பலர் கேள்விஎழுப்புகின்றனரே?

பதில்-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அழைத்து ஏன் நீங்கள்  ஆட்சியமைக்க கூடாது கட்சியின் தலைவர்களை அனுப்பி சஜித் பிரேமதாச பதிலை தெரிவித்தார்.

நான் கோட்டபயவை சந்திக்க சென்றேன்இநாங்கள் ஆட்சிபொறுப்பை  ஏற்கின்றோம் ஆனால் அரசமைப்பு சீர்திருத்தங்கள் சில அவசியம் என நான் தெரிவித்தேன்.

இதன் காரணமாகவா கோட்டாபய நாட்டை விட்டு தப்பியோடினார்?'

பதில்-

ஆம். எங்களிற்கும் கோட்டாபயவிற்கும் இடையிலான சந்திப்பு ரணில் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னர் இடம்பெற்றது.

ஜனாதிபதி மாளிகையில் எங்களின் சந்திப்பு இடம்பெற்றது.

மக்களிற்கு இது குறித்து தெரியாதுஇஇது குறித்து பகிரங்கமாக பேசப்படவில்லை.கோட்டாபயவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது நான் என்பதால் நான் இதனை தெரிவிக்கின்றேன்.

அரசமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும்  யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளது என கோட்டபய தெரிவித்தார்.எங்கள் யோசனைகளிற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனைகளிற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது என நான் கோட்டபாயவிடம் தெரிவித்தேன்.

எங்கள் தரப்பின் பேச்சாளராக நான் நியமிக்கப்பட்டேன் அவர்கள் தரப்பின் பேச்சாளராக ரமேஸ் பத்திரன நியமிக்கப்பட்டார்.

மறுநாள் நான் கோட்டாபயவை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன்இ அதன் பின்னர் ரணி;ல்விக்கிரமசிங்க ஜனாதிபதியின் இல்லத்தில் இருக்கின்றார் அவர் பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்பதை அறிந்தேன்.

அதன் பின்னர் நாங்கள் எங்களை அழைத்தது எல்லாம் ஏமாற்று நாடகம்இஅவர்கள் ஏற்கனவே ரணில்விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க தீர்மானித்துவி;ட்டார்கள் என்ற முடிவிற்கு வந்தோம்.

அவர்களிற்கு ரணில் தேவை - ரணிலுக்கு அவர்கள் தேவை 

நாட்டின் நெருக்கடி நிலை காரணமாகவே நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்கமுன்வந்தோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-23 16:06:37
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21